99 பயணிகளுடன் புறப்படவிருந்த விமானத்தின் மீது துப்பாக்கிச் சூடு!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள டல்லாஸ் விமான நிலையத்திலிருந்து புறப்படவிருந்த விமானமொன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கிச் சூடு நடந்தபோது சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான விமானத்தில் 99 பயணிகள் அமர்ந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதன்போது யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இந்தநிலையில், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துவருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்