9 மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டு இருந்த மாவனெல்லையைச் சேர்ந்த இளைஞன் PTA வழக்கிலிருந்து விடுதலை!

9 மாதங்கள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ்  தடுத்து வைக்கப்பட்டு, கடந்த ஜுலை மாதம் 15 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்ட மாவனெல்லையைச் சேர்ந்த முஹம்மத் ஸுஹைல், இன்று கல்கிஸ்ஸை நீதிவானினால் வழக்கிலிருந்து முழுமையாக விடுதலை செய்யப்பட்டார்.

மாவனெல்லாவைச் சேர்ந்த முகமது சுஹைல், முதலில் 2024 அக்டோபரில் தெஹிவளையில் உள்ள இஸ்ரேலிய தூதரக வளாகத்திற்கு அருகில்  விமானப் போக்குவரத்து மாணவர் முஹம்மத் ஸுஹைல் (வயது  21) கைது செய்யப்பட்டார்.

ஆரம்பத்தில் தனது தேசிய அடையாள அட்டையை எடுத்துச் செல்லாததற்காக கைது செய்யப்பட்ட போதிலும்,  நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்,  இஸ்ரேலிய கொடி மிதிக்கப்படுவதைக் காட்டும் இன்ஸ்டாகிராம் பதிவின் அடிப்படையில் சிறிது நேரத்திலேயே பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் மீண்டும் கைது செய்யப்பட்டார்

இன்று செவ்வாய்க்கிழமை வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, முஹம்மத் ஸுஹைல் சார்பாக ஆஜரான சமூக நீதிக்கான சட்டத்தரணிகள் அமைப்பின் சட்டத்தரணி இல்ஹாம் ஹஸனலி,

விசாரணைகளில் குற்றத்திற்கான எந்த ஆதாரமும் வெளிப்படவில்லை என்று பொலிஸார் ஏற்கனவே நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளதால், அவரை விடுதலை செய்யாமல் வைத்திருப்பது அவருக்கு நடக்கும் அநீதி, ஆகவே அவரை உடனடியாக வழக்கிலிருந்து விடுதலை செய்யுமாறு நீதிவானிடம் வேண்டிக்கொண்டார்.

இதன் போது கல்கிஸ்ஸை நீதிவான், முஹம்மத் ஸுஹைலை PTA வழக்கிலிருந்து முழுமையாக விடுதலை செய்யும் உத்தரவை வழங்கினார்.

இதேவேளை சமூக நீதிக்கான சட்டத்தரணிகள் அமைப்பு, சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் தலைமையில் ஸுஹைல் சார்பாக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளனர்.