
9 மணி நேர நீர் வெட்டு இரத்து
கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை வியாழக்கிழமை திட்டமிடப்பட்ட 9 மணி நேர நீர் வெட்டு இரத்து செய்யப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை அறிவித்துள்ளது.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை விடுத்துள்ள அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து தண்ணீரைப் பெறும் பிரதான பம்பிங் நிலையத்திற்கு மின்சாரம் நிறுத்தப்பட வேண்டியிருப்பதால், அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து நீர் விநியோகம் நிறுத்தப்பட வேண்டியிருக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
