9வது உலர் வலய விவசாயம் தொடர்பான சர்வதேச மாநாடு
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக விவசாய பீடத்தின் ஏற்பாட்டில் “நவீன உலகத்தில் உணவு நெருக்கடியைத்தவிர்த்தல் “என்ற தொனிப்பொருளில் 9வது உலர் வலய விவசாயம் தொடர்பான சர்வதேச மாநாடு யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்றது.
விவசாய பீட கேட்போர் கூடத்தில் நடைபெற்ற குறித்த நிகழ்வுஇ யாழ்ப்பாண பல்கலைக்கழக விவசாய பீட பீடாதிபதி எஸ்.வசந்தரூபா தலைமையில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழக பதில் துணைவேந்தர் பேராசிரியர் எஸ். கண்ணதாசன் கலந்து கொண்டிருந்தார்.
மேலும் சிறப்பு விருந்தினராக விவசாய திணைக்கள பணிப்பாளர் நாயகம் மாலதி பரசுராமன் கலந்து கொண்டிருந்ததுடன், முதன்மை பேச்சாளராக யப்பான் NAGOYA பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் KOISHI USAMI கலந் கலந்து கொண்டு உரையாற்றிருந்தார்.
குறித்த நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர்கள்இ பீடாதிபதிகள்இ விரிவுரையாளர்கள்இ விவசாய திணைக்களங்களின் உயரதிகாரிகள்இ திணைக்களங்களின் தலைவர்கள் இபல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்