மாணவி தேசிய மட்டத்திற்கு தெரிவு

-கல்முனை நிருபர்-

திருகோணமலை – கந்தளாய் லீலாரத்ன பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் நடைபெற்ற 16 வயதிற்குட்பட்டவர்களுக்கான பரிதிவட்டம் வீசும் போட்டியில் நற்பிட்டிமுனை லாபிர் வித்தியாலயத்தில் தரம்-10 இல் கல்வி பயிலும் அமிறுன் பாத்திமா அஸ்தா எனும் மாணவி 21.47 மீட்டர் தூரம் எறிந்து இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப்பதக்கத்தை வென்றதுடன் தேசிய மட்ட போட்டிக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

 

செய்திகள் மற்றும் வேலைவாய்ப்பு தகவல்களை அறிய தினமும் Minnal24.com பார்க்கவும்

எமது குழுவில் இணைய கீழே உள்ள Join Whatsapp Group ஐ அழுத்தவும்

JOIN WHATSAPP GROUP