பல்கலைக்கழகத்தின் 36 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 36 ஆவது பொதுப் பட்டமளிப்பு வைபவத்தின் பகுதி-1 இன்று வியாழக்கிழமை காலை மேற்படி பல்கலைக்கழக உள்ளக விளையாட்டு அரங்கில் ஆரம்பமாகி உள்ளது.
ஆரம்பமாகிய பட்டமளிப்பு விழா 7 ஆம் திகதி வெள்ளிக்கிழமை, 8 ஆம் திகதி சனிக்கிழமை ஆகிய தினங்களிலும் தொடர்ந்தும் எட்டு அமர்வுகளாக இடம்பெறும்.
இதேவேளை, மேற்படி பட்டமளிப்பு விழாவில் 185 பட்டப் பின் தகைமை பெற்றவர்களுக்கும், 2 ஆயிரத்து 46 உள்வாரி மாணவர்களுக்கும், 147 தொலைக்கல்வி மாணவர்களுக்குமாக 2ஆயிரத்து 378 பேருக்குப் பட்டங்கள் மற்றும் தகைமைச் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளது.
இவ் நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் வேந்தர் சிரேஷ்ட சோ.பத்மநாதன், துணை வேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, கலந்துகொண்டு பட்டங்களை வழங்கி வைக்கின்றனர்.
இதில் துறைப்பீட பேராசியர்கள், விரிபுரையாளர்கள்,மாணவர்கள் கலந்துகொள்கின்றனர்.
செய்திகள் மற்றும் வேலைவாய்ப்பு தகவல்களை அறிய தினமும் Minnal24.com பார்க்கவும்
எமது குழுவில் இணைய கீழே உள்ள Join Whatsapp Group ஐ அழுத்தவும்