குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அறிவித்தல்

பிரித்தானிய மகாராணியின் இறுதிக்கிரியை எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ளதையடுத்து, திங்கட்கிழமை விசேட அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்கள் தொடர்ந்தும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு நாள் மற்றும் வழக்கமான சேவைகளின் கீழ் பாஸ்போர்ட் பெறுவதற்கு, முன்னதாக திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே அன்றையதினம் சேவைகள் வழங்கப்படும் எனவும் தெரிவிககப்பட்டுள்ளது.

இதேவேளை, அந்த திணைக்களத்தினால் வழங்கப்படும் ஏனைய சேவைகள் அன்றைய தினம் வழங்கப்பட மாட்டாது.

எக்காரணம் கொண்டும் திகதி மற்றும் நேரங்களை முன்பதிவு செய்யாத எவரும் எதிர்வரும் 19ஆம் திகதி வரவேண்டாம் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.