83 வருடக் காதலுக்குக் கிடைத்த பரிசு
உலகின் மிக வயதான தம்பதி என்ற சாதனையை மியாமியைச் சேர்ந்த எலெனோர் (107) மற்றும் லைலே (108) ஜோடி படைத்துள்ளனர்.
கல்லூரியில் கூடைப்பந்து விளையாடிய லைலேவை எலெனோர் பார்க்கச் சென்றபோது மலர்ந்த காதல், 83 ஆண்டுகளாக நீடித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் ஒருவரை ஒருவர் அதிகமாக நேசிப்பதே இந்த நீண்ட நாள் பந்தத்திற்கான இரகசியம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக உலகின் நீண்டகாலமாக இணைந்திருந்த தம்பதியர் என்ற பட்டத்தைப் பிரேசிலில் வசித்த மனுவேல் ஏஞ்சலிம் டினோ (106) மற்றும் அவரது மனைவி மரியா டி சோசா டினோ (102) ஆகியோர் பெற்றிருந்தனர்.
அவர்களின் மறைவுக்குப் பின்னர் குறித்த தம்பதியர் அந்த பட்டத்தைப் பெற்றுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
