80 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து : ஒருவர் பலி
இந்தியா – மும்பையில் இன்று புதன்கிழமை 80 பயணிகளுடன் பயணித்த படகு ஒன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் 66 பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை பலர் காணாமல் போயுள்ள நிலையில் இந்தியக் கடற்படை, ஜவஹர்லால் நேரு துறைமுக ஆணையம் மற்றும் கடலோர காவல்படை ஆகியன மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்