8 வருடங்களுக்கு மேல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அறநெறி பாடசாலை ஆரம்பம்

மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் கிராம இளைஞர்களின் முயற்சியின் பயனாக கடந்த 10 ஆம் மாதம் “உறவின் சிகரம்” மஞ்சந்தொடுவாய் இளையோர் தொண்டர் அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது.

அமைப்பின் நோக்கமானது மஞ்சந்தொடுவாய் கிராமம் சார்ந்த பொது நலனில் நாம் அனைவரினையும் உள்வாங்கி சுயநலமற்ற பொது நலனில் நாம் ஒவ்வொருவரும் ஈடுபட்டு பக்கச் சார்பற்ற நடுநிலைமையுடன் கூடிய புதியதோர் தலை முறையினரை உருவாக்கி அசாத்தியமான விடயங்களை சாத்தியமாக்கி எமது கிராமிய விழுமியங்களையும் கிராமம் சார் பொது விடயங்களையும் அபிவிருத்தி பாதையில் இட்டுச்செல்வதே ஆகும்.

இதன் முதல் கட்டமாக கிராமத்தில் சமயம் சார்ந்த செயற்பாடுகளுக்கு முன்னூரிமை அளிக்கும் பொருட்டு அறநெறி ஆரம்பிப்பது தொடர்பாக அமைப்பினால் முடிவு எடுக்கப்பட்டு.

8 வருடங்களுக்கு மேலாக பொருளாதார பிரச்சினைகளால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அறநெறி வகுப்பானது கடந்த 2025.01.19ஆம் திகதி ஆலடி சிறி சித்தி விநாயகர் ஆலயத்தில் “உறவின் சிகரம்” அமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு இந்து கலாசார உத்தியாகத்தரின் வழிகாட்டலின்கீழ் இராமகிருஷ்ண மிஷன் சுவாமி மற்றும் ஆலய பரிபாலன சபையினரின் ஆசியுடனும் ஆரையம்பதி லயன்ஸ் களகத்தின் அனுசரனையுடனும் சுமார் 60 மாணவர்களைக் கொண்டு சிறப்பாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மேலும் இவ் அறநெறி மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் அனைத்தும் உறவின் சிகரங்கள் அமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க ஆரையம்பதி லயன்ஸ் களகத்தினால் அன்பளிப்பாக வழங்கப்பட்டதுடன் அறநெறி நடைபெறும் பிரதி ஞாயிறு தொறும் அமைப்பின் உறுப்பினர்களால் மாணவர்களுக்கு காலை உணவும் வழங்கப்பட்டு வருகிறது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்