8 வயது சிறுமியை வன்புணர முயற்சி: 57 வயது நபர் கைது

-பதுளை நிருபர்-

பதுளையில் 8 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த நபர் ஒருவரை நேற்று வியாழக்கிழமை மாலை கைது செய்துள்ளதாக மடூல்சீமை பொலிஸார் தெரிவித்தனர்.

மடூல்சீமை பிட்டமாறுவை றோபேரி பகுதியை சேர்ந்த 57 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் மற்றும் குறித்த சிறுமி ஆகியோர் லயன் குடியிருப்பில் வசித்து வந்த நிலையில் குறித்த நபர் தனிமையில் இருக்கும் போது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்ததாக மடூல்சீமை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக மடூல்சீமை பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை பசறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மடூல்சீமை பொலிஸார் தெரிவித்தனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்