8 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்த நபரின் சடலம் மீட்பு

கொழும்பு – கெஸ்பேவ பகுதியில் உள்ள வீட்டில்  8 மாதங்களுக்கு முன்பு இறந்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவரின் சடலம் நேற்று திங்கட்கிழமை இரவு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உடல் மிகவும் சிதைந்து அடையாளம் காண முடியாத அளவுக்கு இருந்ததாகவும், சுமார் 8 மாதங்களுக்கு முன்பு இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாமெனவும் இறந்தவர் ஒரு பெண்ணாக இருக்கலாமெனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் கெஸ்பேவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க