8 இலட்சத்திற்கும் அதிகமான பணம் மற்றும் போதைப் பொருளுடன் இருவர் கைது!

-அம்பாறை நிருபர்-

சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்ட 8 இலட்சத்திற்கும் அதிகமான பணம் மற்றும் போதைப் பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அடையாளம் காணப்பட்ட போதைப் பொருள் விற்பனை மற்றும் போதைப் பொருள் பாவனை செய்பவர்களின் வீடுகளில் கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அஸாரின் பணிப்புரைக்கமைய,  இன்று சனிக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் விசேட தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெற்றன.

இதன் போது, ஐஸ் போதைப் பொருள், இலத்திரனியல் தராசு, 893,840 ரூபா பணத்துடன்  29 வயது மதிக்கத்தக்க பெண்,  22 வயது மதிக்கத்தக்க ஆண் என இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.