8 ஆவது தர்மமுழக்கம் துடுப்பாட்ட தொடரில் தர்மபுரம் மத்திய கல்லூரி அணி 23 ஓட்டங்களால் வெற்றி

தர்மமுழக்கம் என்று அழைக்கப்படுகின்ற கிளிநொச்சி முழங்காவில் மகா வித்தியாலய அணிக்கும் தர்மபுரம் மத்திய கல்லூரி அணிகளுக்குமிடையிலான 8 ஆவது தர்மமுழக்கம் துடுப்பாட்ட தொடர் முழங்காவில் மகா வித்தியாலய மைதானத்தில் நேற்று சனிக்கிழமை ஆரம்பமாகியது நேற்று முதல் நாள் போட்டியில் முதலாவது இனிங்சில் தர்மபுரம் மத்திய கல்லூரி அணியினர்  150 ஓட்டங்களை பெற்றனர்.

முழங்காவில் மகா வித்தியாலய அணியினர் முதலாவது இனிங்சில் 101 ஓட்டங்களை பெற்றனர்.

இரண்டாவது நாள் இரண்டாவது இனிங்சில் தர்மபுரம் மத்திய கல்லூரி அணியினர் 64ஓட்டங்களை பெற்று அனைத்து இலக்குகளையும் இழந்தனர்.

114 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற நிலையில் பதிலுக்கு இரண்டாவது இனிங்சில் துடுப்பெடுத்தாடிய முழங்காவில் மகா வித்தியாலய அணி 90ஓட்டங்கள் பெற்ற நிலையில் அனைத்து இலக்குகளையும் இழக்க 23ஓட்டங்களால் தர்மபுரம் மத்திய கல்லூரி அணி வெற்றி பெற்றது. இதுவரை நடைபெற்ற எட்டு போட்டிகளில் 06போட்டிகளில் தர்மபுரம் மத்திய கல்லூரி வெற்றி பெற்றிருப்பதுடன்.

ஒரு போட்டியில் முழங்காவில் மகா வித்தியாலய அணி வெற்றி பெற்றுள்ளது.

ஒரு போட்டி சமநிலையில் நிறைவடைந்துள்ளது.எட்டாவது துடுப்பாட்ட தொடரின் ஆட்டநாயகனாக தர்மபுரம் மத்திய கல்லூரி அணி வீரர் ர.தமிழ்வானன் தெரிவு செய்யப்பட்டார்.

சிறந்த துடுப்பாட்ட வீரராக முழங்காவில் மகா வித்தியாலய  வீரர் ஜெ.சதாமாறன் தெரிவு செய்யப்பட்டார்.சிறந்த பந்து வீச்சாளராக தர்மபுரம் மத்திய கல்லூரி அணி வீரர் ஆர்.தமிழ்வானன் தெரிவு செய்யப்பட்டார்.சிறந்த களத்தடுப்பாளராக முழங்காவில் மகா வித்தியாலய வீரர் எஸ்.அருட்செல்வன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.