8 அறநெறி பாடசாலைகளுக்கு கதிரைகள் வழங்கி வைப்பு

-கிண்ணியா நிருபர்-

தம்பலகாமம் பிரதேச செயலக பகுதியில் பிரதேச செயலக மண்டபத்தில் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் நேற்று திங்கட்கிழமை தெரிவு செய்யப்பட்ட அறநெறி பாடசாலைகளுக்கான கதிரைகள் வழங்கி வைக்கப்பட்டன.

இதன் போது தேசிய உறவுகள் நலன்புரி சங்கத்தால் ஆசிரியர்கள் மாணவர்களின் நலன் கருதி  8 அறநெறி பாடசாலைகளுக்கு 250 கதிரைகள் வழங்கி வைக்கப்பட்டன.

இதில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், இந்து கலாசார உத்தியோகத்தர் மற்றும் நலன்புரி அமைப்பின் ஊழியர்கள் அறநெறி பாடசாலை ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

8 அறநெறி பாடசாலைகளுக்கு கதிரைகள் வழங்கி வைப்பு

8 அறநெறி பாடசாலைகளுக்கு கதிரைகள் வழங்கி வைப்பு

8 அறநெறி பாடசாலைகளுக்கு கதிரைகள் வழங்கி வைப்பு

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்