79 ஆவது ஆண்டு விழாவுக்கு தயாராகும் ஐக்கிய தேசியக் கட்சி

ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு நிறைவு விழா, எதிர்வரும் 6 ஆம் திகதி காலை 9.30 கொழும்பில் உள்ள இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் நடைபெறும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வுக்கு அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் அழைக்கப்படுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக அரசியலமைப்பு சர்வாதிகாரத்தை தோற்கடிப்பது என்ற கருப்பொருளின் கீழ் அண்மையில் நாள்களில் அரசாங்கத்துக்கு எதிராக அணிதிரண்ட அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளதாகவும் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசியல் நிலைமை, நாடு எதிர்கொள்ளும் சவால்கள், தற்போதைய பொறுப்பு மற்றும் எதிர்க்கட்சியின் எதிர்கால பாதை என்பன தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை ஆற்றவுள்ளதாகும் வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டு விழாவில் பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பதால், மாநாட்டை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவுக்கு வெளியே நடத்த தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட அதிகாரிகளின் பங்கேற்புடன் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக வஜிர அபேவர்தன மேலும் தெரிவித்துள்ளார் .