எரிபொருள் பவுஸர்களின் அனுமதிப்பத்திரங்கள் உடனடியாக இடைநிறுத்தம்

CEYPETCO மற்றும் LIOC ஆகிய 3 எரிபொருள் பவுஸர்களின் அனுமதிப்பத்திரங்கள் உடனடியாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.

3 எரிபொருள் தாங்கி ஊர்திகளில் இருந்து சட்டவிரோதமான முறையில் எரிபொருள் விநியோகிக்கப்பட்ட விதம் குறித்து சமூக வலைத்தளங்களில் வைரலாக்கப்பட்ட காணொளிகள் தொடர்பில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் குறித்த  காணொளிகள் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும், என அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டர் பதிவொன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.