இரவு 75 மில்லிமீற்றர் அளவில் மழை

நாட்டின் சில பகுதிகளில் இன்றிரவு வேளையில் 75 மில்லிமீற்றர் வரையான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழையுடனான வானிலை நிலவக்கூடும்.

சபரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் 75 மில்லிமீற்றர் வரையான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசக்கூடுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்