75 மில்லியன் ரூபா கொள்ளை : சந்தேகநபர் கைது!

மினுவாங்கொடை பகுதியில் பாதுகாப்பாக பணத்தைக் கொண்டு செல்லும் வேனுடன் பணத்தை கொள்ளையிட்ட சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வேனின் சாரதியாக பணியாற்றிய சந்தேகநபர் நேற்று முன்தினம் திங்கட்கிழமை 75 மில்லியன் ரூபாய் பணத்துடன் வேனை கொள்ளையிட்டு சென்றார்.

பின்னர் குறித்த வேன் கம்பஹா – உக்கல்கொட பகுதியில் கைவிடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டது.

இந்தநிலையில் கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றுக்கு அமைய, குறித்த சந்தேகநபர் கம்பஹா – கடுவன்கஹா பகுதியில் வைத்துக் குற்றவியல் விசாரணை பிரிவினரால் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, 3 கோடியே 15 லட்சம் ரூபாவுக்கும் அதிக பணம் மீட்கப்பட்டுள்ளது.