
75 அடி பள்ளத்தில் விழுந்த விபத்துக்குள்ளான ஜீப்
கம்பளை நெட்டாபிட்டிய பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி 75 அடி பள்ளத்தில் விழுந்து பொலேரோ ஜீப் விபத்துக்குள்ளாகியுள்ளது.
குழந்தைகள் உட்பட ஆறு பெண்களும் ஒன்பது ஆண்களும் மொத்தமாக பதினைந்து பேரே விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்டாரவளை பிரதேசத்தில் இடம்பெற்ற இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு நேற்று இரவு வீடு திரும்பிய குழுவினரே இன்று திங்கட்கிழமை அதிகாலை நான்கு மணியளவில் விபத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.
சாரதியின் தூக்க கலக்கமே விபத்திற்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
