இலவச அரிசியை உட்கொண்ட 7 கோழிகள் உயிரிழப்பு?

மொனராகலையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட இலவச அரிசியை உட்கொண்ட 7 கோழிகள் உயிரிழந்துள்ளமை தொடர்பில் சுகாதார அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

ரிதிகம பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பானகமுவ பகுதியிலுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தவர் ஒருவர் தனது கோழிகளுக்கு குறித்த இலவச அரியை உட்கொள்ள வழங்கியுள்ள நிலையில் 7 கோழிகள் உயிரிழந்துள்ளன.

இதனையடுத்து குறித்த உரிமையாளர் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களிடம் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார். எனினும் குறித்த அரிசியை உட்கொண்டதால் கோழிகள் உயிரிழந்துள்ளனவா என்பது தொடர்பில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களினால் உறுதிப்படுத்த முடியவில்லை.

இந்நிலையில் இது தொடர்பில் மேலதிக சோதனை அறிக்கையைப் பெற்றுக் கொள்வதற்கான அனுமதியை வழங்குமாறு பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் றம்படகல்ல நீதிமன்றத்திடம் கோரியிருந்தனர்.

இதனையடுத்து அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட இலவச அரிசி தொடர்பில் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு றம்படகல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்