7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் விடுத்துள்ளது.

இதன்படி நுவரெலியா, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, கொழும்பு மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நுவரெலியா, இரத்தினபுரி, கண்டி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களின் சில பிரதேச செயலாளர் பிரிவுகளிற்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.