7 பழக்கங்கள் சிறுநீரக ஆரோக்கியத்தை பாதிக்கும்
பலரும் சிறுநீரக நோயால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கான ஆரம்ப புள்ளி என்பது நம் அன்றாட பழக்க வழக்கங்களும், உணவு முறையும்தான்.
வெளிப்புற ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவதால் என்னமோ உள்புற உறுப்புகளின் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகின்றன. அந்த வகையில் பலரும் நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கான ஆரம்ப புள்ளி என்பது நம் அன்றாட பழக்க வழக்கங்களும், உணவு முறையும்தான். அப்படி உங்கள் அன்றாட விஷயங்களில் எவை சிறுநீரகத்தை பாதிக்கும் என்று பார்க்கலாம்.
வைட்டமின் குறைபாடு : சிறுநீரக ஆரோக்கியத்திற்கு தேவையான சில வைட்டமின்கள், ஊட்டச்சத்துகளை சரியாக எடுத்துக்கொள்ளவில்லை எனில் குறைபாடு காரணமாக சிறுநீரகம் பாதிக்கப்படலாம்.
பதப்படுத்தபட்ட உணவுகள் : பதப்படுத்தப்பட்ட உணவுகள் சோடியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகமாக இருக்கும். இவை இரண்டுமே சிறுநீரக அரோக்கியத்தை கெடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
வலி நிவாரண மாத்திரைகள் : வலி நிவாரண மாத்திரைகள் அந்த நேரத்தில் உங்கள் வலியை கட்டுப்படுத்தலாம். ஆனால் அவற்றின் நீண்ட கால பயன்பாடு உங்கள் சிறுநீரக பாதிப்பை தூண்டலாம். புற்றுநோய் அபாயமும் இருக்கு.
மதுமானம் : நீங்கள் தினமும் மதுமானம் இல்லாமல் இருக்க முடியாது என அடம்பிடித்தால் அதுவே உங்கள் உயிருக்கு ஆபத்தாகும். சிறுநீரக செயலிழப்பு உண்டாகி உயிரையே பறிக்கலாம்.
உடற்பயிற்சி : தினமும் உடற்பயிற்சி செய்வோருக்கு செய்யாதவர்களை காட்டிலும் சிறுநீரக கல் பாதிப்பு குறைவு என்று ஆய்வு ஒன்று கூறுகிறது. எனவே இதுபோன்ற சிறுநீரக பாதிப்புகளை தவிர்க்க குறைந்தது வாரத்தில் 3 முறையாவது உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது.
உப்பு : அதிக உப்பு பயன்படுத்துவது உங்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். இது உங்கள் சிறுநீரக ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும்.
குறைவாக தண்ணீர் அருந்துதல் : நீங்கள் சரியான முறையில் தண்ணீர் அருந்தவில்லை எனில் சிறுநீரகத்தில் கல் உருவாவதற்கான வாய்ப்பு அதிகம்.