
7ஆவது இடத்திற்கு முன்னேறினார் ஸ்மித்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதங்களை விளாசிய வீரர்கள் வரிசையில் அவுஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் 7ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இலங்கை அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதம் விளாசியதைத் தொடர்ந்து அவர் குறித்த மைல் கல்லை எட்டியுள்ளார்.
முன்னதாக குறித்த பட்டியலில் சுனில் கவாஸ்கர் 7 ஆவது இடத்திலிருந்த நிலையில் அவரை பின் தள்ளி ஸ்டீவ் ஸ்மித் முன்னேறியுள்ளார்.
இதில் 51 சதங்களுடன் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்திலும், ஜாக் கல்லிஸ் 45 சதங்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
