62 பல் வைத்தியர்களுக்கு நியமனக் கடிதங்கள்: சுகாதார அமைச்சில் விசேட நிகழ்வு

இலங்கை சுகாதார சேவையில் நிலவும் பல் வைத்தியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்பும் வகையில், புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட 62 பல் வைத்தியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் திங்கட்கிழமை  நடைபெறவுள்ளது.

சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அவர்களின் தலைமையில், சுகாதார அமைச்சின் பிரதான கேட்போர் கூடத்தில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இதன்போது நியமனம் பெறும் இந்த வைத்தியர்கள் இலங்கையிலுள்ள மருத்துவ பீடங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் 5 வருட இளங்கலை மருத்துவக் கல்வியைப் பூர்த்தி செய்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள முக்கிய அரசாங்க வைத்தியசாலைகளில் நிபுணத்துவ மற்றும் சிரேஷ்ட வைத்தியர்களின் மேற்பார்வையின் கீழ் ஓராண்டு கால கட்டாயப் பயிற்சியையும் அவர்கள் நிறைவு செய்துள்ளனர்.

இந்த நியமனங்கள் 2026 ஜனவரி 1 முதல் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.