6000 மில்லிலீற்றர் கசிப்புடன் ஒருவர் கைது
-பதுளை நிருபர்-
லுணுகலை ஒப்டன் ஏ பிரிவில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட 28 வயதுடைய நபர் ஒருவரை நேற்று திங்கட்கிழமை மாலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
லுணுகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒப்டன் ஏ பிரிவில் கசிப்பு விற்பனை இடம்பெறுவதாக, தோட்ட பொதுமக்களால் பொலிஸாருக்கு ரகசிய தகவல் வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, ஒப்டன் ஏ பிரிவுக்கு விரைந்த லுணுகலை பொலிஸார், கசிப்பு விற்பனை செய்யும் இடத்தை சுற்றி வளைத்தனர்.
இதன்போது, 6000 மில்லிலீற்றர் கசிப்புடன், 28 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
குறித்த நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர், நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக, லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.
