6000 மெற்றிக் தொன் டீசலை வழங்க ஐ.ஓ.சி இணக்கம்

மின்னுற்பத்தி நிலையங்களுக்கு 6000 மெற்றிக் தொன் டீசலை வழங்குவதற்கு இந்திய எண்ணெய் நிறுவனம் (ஐ.ஓ.சி) இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை மின்சார சபை, இன்று வியாழக்கிழமை தெரிவித்தது.

டீசல் பற்றாக்குறை காரணமாக செயலிழக்க ஆரம்பித்துள்ள களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையம் மாத்திரமே தற்போது செயற்படுத்தப்படுவதாக இலங்கை மின்சார சபை குறிப்பிட்டது.

கெனியன் நீர் மின்னுற்பத்தி நிலையத்தில் ஒரு மின்பிறப்பாக்கி மாத்திரம் செயற்படுத்தப்படுவதாகவும் ஏனைய அனைத்து அனல் மின் உற்பத்தி நிலையங்களும் தற்போது செயலிழந்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்திலிருந்து 810 மெகாவோட் மின்சாரம் தேசிய கட்டமைப்பில் நேற்று இணைக்கப்படுவதாகவும் மின்சார சபை தெரிவித்துள்ளது.

Minnal24 FM