60 மருந்துப்பொருட்களின் விலை குறைப்பு!

எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் 60 ஒளடதங்களுக்குரிய விலை குறைக்கப்பட்டு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல், சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் கையொப்பத்துடன் நேற்று வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, 60 வகையான ஒளடதங்களின் அதிகபட்ச சில்லறை விலை 16 சதவீதத்தால் குறைக்கப்படவுள்ளதாக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்