
60 மாடி கிரிஷ் கட்டிடத்தில் தீப்பரவல்!
கொழும்பு – கோட்டையில் உள்ள 60 மாடி கிரிஷ் கட்டிடத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
கட்டிடத்தின் மேல் தளத்தில் இத்தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது 3 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
