60 ஆவது ஜெனீவா கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்
60 ஆவது ஜெனீவா கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்
ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகிறது.
கூட்டத்தொடர் இன்று முதல் ஒக்டோபர் மாதம் 08 ஆம் திகதி வரை நடைபெறுகிறது .
அமர்வில் பங்கேற்கஅமைச்சர் விஜித ஹேரத்நேற்று ஜெனீவாபயணமானார்.
இந்த முறை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்தின் சார்பாக அமைச்சர் விஜித ஹேரத் விசேட உரை ஆற்றவுள்ளார்.
அமைச்சர் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 3.45 இற்கு இலங்கை அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி விசேட அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது ஜெனீவாவில் பல உயர்மட்ட இராஜதந்திரிகளுடன் அமைச்சர் கலந்துரையாடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோக்கர் டர்க் மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இடையே விசேட சந்திப்பும் இடம்பெறவுள்ளது .