
60 அடி பள்ளத்தில் கவிழ்ந்து உழவு இயந்திரம் விபத்து
-பதுளை நிருபர்-
பதுளை வெவஸ்ஸ தோட்டத்திற்குச் சொந்தமான உழவு இயந்திரம் இன்று புதன்கிழமை பிற்பகல் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் சாரதி பலத்த காயமடைந்த நிலையில் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த சாரதி வெவஸ்ஸ தோட்டத்தை சேர்ந்த 47 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது
இவ் உழவு இயந்திரம் வெவஸ்ஸ தோட்டத்திற்கு சொந்தமானது எனவும் வெவஸ்ஸ தோட்ட காரியாலயத்தில் இருந்து வெவஸ்ஸ தொழிற்சாலைக்கு சென்று கொண்டிருந்த போது பதுளை பசறை வீதி 7 கட்டை பகுதியில் வீதியை விட்டு விலகி 60 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை போக்குவரத்து பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
