6.5 மில்லியன் ரூபா மதிப்புள்ள காலாவதியான பேரீச்சம்பழங்கள் பறிமுதல்
வத்தளையில் உள்ள களஞ்சியசாலை ஒன்றில் நுகர்வோர் விவகார அதிகார சபை (CAA) நடாத்திய சோனையில், விற்பனைக்காக சேமித்து வைக்கப்பட்டிருந்த, 3,620 கிலோ காலாவதியான பேரீச்சம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட பேரீச்சம்பழங்களின் மதிப்பு 6.5 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
சோதனை நடவடிக்கையை தொடர்ந்து, காலாவதியான பேரிச்சம்பழங்களை அகற்றவும், மேலும் குறித்த களஞ்சியசாலையின் உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும், நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
