
6 வருடங்களின் பின்னர் திறக்கப்பட்ட வீதி
மண்சரிவு அபாயம் காரணமாக கடந்த 6 வருடங்களாக மூடப்பட்டிருந்த ஹெட்டன் – கண்டி பிரதான வீதியின் கினிகத்தேனை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இருந்த பகுதி பல கட்டங்களின் கீழ் பாதுகாப்பான பக்க சுவர்கள் நிர்மாணிக்கப்பட்டு வீதி காபட் இடப்பட்டு புனரமைப்பு செய்யப்பட்டது.
நேற்று வியாழக்கிழமை குறித்த வீதி போக்குவரத்திற்கென திறக்கப்பட்டது.
தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுல சுரவீர ஆராய்ச்சியினால் வீதி திறந்துவைக்கப்பட்டது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பரிந்துரைக்கமைய இந்த வீதியின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
