
6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம்
நாட்டின் 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா, இரத்தினபுரி, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தறை ஆகிய 6 மாவட்டங்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.
களுத்துறை , கண்டி , கேகாலை , புலத்கொஹூபிட்டிய, மாத்தறை மாவட்டம் , நுவரெலியா , இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
