6 போத்தல் கசிப்புடன் ஒருவர் கைது

-யாழ் நிருபர்-

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் முருகன் வீதியில் 6 போத்தல் கசிப்புடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்டவர் நீண்ட காலமாக கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மேலதிக விசாரணையின் பின் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்குரிய நடவடிக்கையை கோப்பாய் பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.