6 புலம்பெயர் அமைப்புகள் மீதான தடை நீக்கம்

பயங்கரவாத காரணங்களுக்காக தடை விதிக்கப்பட்டிருந்த 6 புலம்பெயர் அமைப்புகள் மீதான தடையை பாதுகாப்பு அமைச்சு நீக்கியுள்ளது.

எனினும் தமிழீழ விடுதலை புலிகள் (LTTE) இயக்கத்தின் மீதான தடை தொடர்ந்தும் அமுலில் உள்ளது.

அதன்படி, உலகத் தமிழ் பேரவை, பிரித்தானியத் தமிழர் பேரவை, கனடியத் தமிழர் பேரவை, அவுஸ்திரேலியத் தமிழ்க் காங்கிரஸ், ஈழ மக்கள் கூட்டமைப்பு, தமிழ் இளைஞர் அமைப்பு மற்றும் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஆகியவற்றின் மீதான தடை, பாதுகாப்பு அமைச்சினால் நீக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு பெப்பிரவரி 25 ஆம் திகதி பிரசுரிக்கப்பட்ட அரச வர்த்தமானியில் இந்த அமைப்புக்கள் தடை செய்யப்பட்டதாக பிரகடனப்படுத்தப்பட்டன.

இந்நிலையில், தற்போது 2012 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க ஐக்கிய நாடுகளின் ஒழுங்குமுறையின் 4 (7) ஆவது ஒழுங்கின்கீழ், இந்த தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

வர்த்தமானி https://drive.google.com/file/d/1LpVX5gzlKiHvmO-XcOuoaRNnQeluqjI4/view