6 ஆம் திகதி விசேட அறிக்கை வெளியிடும் முன்னாள் ஜனாதிபதி ரணில்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 6 ஆம் திகதி விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அன்றைய தினம் ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் ரணில் விக்ரமசிங்க இந்த அறிக்கையை வெளியிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஏனைய உறுப்பினர்களுடன் கலந்துரையாடி வருவதாகவும், தற்போது நாடு எதிர்நோக்கும் சவால்கள் உள்ளிட்ட பல விடயங்கள் இந்த விசேட அறிக்கையில் உள்ளடக்கப்பட உள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் இருந்து மேலும் தெரிவிக்கப்படுகின்றது.