6 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் அதிகபட்ச மொத்த மற்றும் சில்லறை விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

அந்த வகையில் காய்ந்த மிளகாய் ஒரு கிலோ 870 ரூபாவாகவும், வெள்ளை சீனி ஒரு கிலோ 265 ரூபாவாகவும் இறக்குமதி செய்யப்படும் உளுந்து ஒரு கிலோ 900 ரூபாவாகவும் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 320 ரூபாவாகவும் உருளைக்கிழங்கு ஒரு கிலோ 120 ரூபாவாகவும் பருப்பு ஒரு கிலோ 295 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படும் என அறிவிப்பட்டுள்ளது.

குறித்த 6 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் இன்று திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலைகுறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.