569 ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு!

-பதுளை நிருபர்-

தேசிய கல்வியல் கல்லூரி டிப்ளோமா பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளும் தேசிய வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக ஊவா மாகாணத்திற்கு 569 ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை பதுளை சைமன் பீரிஸ் ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது.

ஊவா மாகாணத்தில் காணப்படும் மாகாண சபை பாடசாலைகள் 896 இல் வசதி குறித்த பாடசாலைகளுக்காகக் குறித்த ஆசிரியர்கள் சேவைக்காக இணைக்கப்பட்டுள்ளதுடன், அப் பாடசாலைகளில் ஐந்தாண்டு காலம் பணியாற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் ஆட்சேர்ப்பு வேலைத்திட்டத்தின் தேசிய வைபவம் ஜனாதிபதி தலைமையில் கொழும்பில் இடம்பெற்றதுடன், ஊவா மாகாணத்தின் பிரதான வைபவம் ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தலைமையில் பதுளையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசனாயக, பிரிவெனாக் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜித பேருகொட, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே, ஊவா மாகாண பிரதான செயலாளர் தமயந்தி பரணகம, ஆளுநரின் செயலாளர் ஆர்.எச்.சி.பிரியந்தி, மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.எம்.நந்தசேன உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்