55 மில்லியன் ரூபா மோசடி செய்த குற்றச்சாட்டில் வைத்தியர் கைது!

ஐம்பத்தைந்து மில்லியன் ரூபாவை மோசடி செய்த சம்பவம் தொடர்பில் , வைத்தியர் ஒருவர்  குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனியார் நிறுவனமொன்றின் பணிப்பாளராக கடமையாற்றிய , கொனஹேன  பிரதேசத்தில் வசிக்கும் 52 வயதுடைய வைத்தியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பொது முறைப்பாடு பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.