54 ஆவது வயதில் 17 ஆவது குழந்தை!

இந்தியா-ராஜஸ்தானை சேர்ந்த பெண்ணொருவர் தனது 54 ஆவது வயதில் 17 ஆவது குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.

இதற்கு முன்னர் அவர் பெற்றெடுத்த குழந்தைகளில் 5 குழந்தைகள் தொற்று நோய்ப் பாதிப்பால் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குழந்தை பிறப்பு விகிதம் ராஜஸ்தானில் அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

50 வயதுக்கு மேல் அந்த பெண், குழந்தை பெற்றுக் கொண்டமை அரிதான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.