52 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த பாடசாலை மாணவி மரணம்

ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் 52 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த 17 வயது பாடசாலை மாணவி நேற்று (24) உயிரிழந்தார்.

நுகேகொடை, பெரேரா மாவத்தையைச் சேர்ந்த ருஹினி அகித்மா மஹாவத்த என்ற மாணவி, நுகேகொடை, அனுலா வித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி கற்று வந்துள்ளார்.

கடந்த நவம்பர் 28 ஆம் திகதி காலை வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த அவர், கதிரையிலிருந்து எழுந்து நகர முயன்றபோது திடீரென தவறி வீழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.