500,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் இருளில் தள்ளப்பட்டனர்
இந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் வரை நிலுவைத் தொகையை செலுத்தத் தவறியதன் காரணமாக 500,000 இற்கும் அதிகமான வாடிக்கையாளர்களின் மின்சார விநியோகத்தை இலங்கை மின்சார சபை (CEB) துண்டித்துள்ளது.
2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வரை நிலுவைத் தொகை செலுத்தப்படாமையின் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை ஊடகப் பேச்சாளர் பொறியியலாளர் நோயல் பிரியந்த தெரிவித்தார்.
மின்சார சபையின் பல்வேறு விதிமுறைகளுக்கு அமைவாகவே மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், வாடிக்கையாளர் நிலுவைத் தொகையை செலுத்தியவுடன் மின் இணைப்பு மீளமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இலங்கை மின்சார சபை கடந்த வருடத்தில் மூன்று தடவைகள் மின்சாரக் கட்டணங்களைத் திருத்தியுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்