50,000 அமெரிக்க டொலர்களை வைத்திருந்த ஒருவர் கைது

50,000 அமெரிக்க டொலர்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 36 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று சனிக்கிழமை இரவு ராஜகிரிய வெலிக்கடை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக, இலங்கையர்கள் தமது கைகளில் பணமாக வைத்திருக்கக் கூடிய ஆகக்கூடிய வெளிநாட்டு நாணயத்தின் பெறுமதி 15,000 அமெரிக்கா டொலர்களில் இருந்து 10,000 டொலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்திருந்தார்.

இலங்கையின் அந்நியச் செலாவணிச் சட்டத்தின் கீழ், விதிகளை மீறுவதற்கு எதிராக வைத்திருக்கும் நாணயத் தாள்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும், மூன்று மாதங்களுக்கும் மேலாக அவற்றை வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தெரிவிக்கப்பட்டிருந்தது.