50,000க்கும் அதிகமானோர் ஒரு வருடத்திற்கும் அதிகமான காலம் நீர்கட்டணம் செலுத்தவில்லை

50,000க்கும் அதிகமான நுகர்வோர் ஒரு வருடத்திற்கும் அதிகமான காலம் நீர்கட்டணத்தை செலுத்தாமல் உள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அவர்களிடம் இருந்து 532 மில்லியன் ரூபா கிடைக்கப்பெற வேண்டும்.

தற்போது குறித்த நுகர்வோருக்கு அறிவித்தல் விடுத்து நீர் விநியோகத்தை துண்டிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையிடம் இருந்து 2.8 மில்லியன் நுகர்வோர் நீரை பெறுகின்றனர்.

இந் நிலையில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு 7,500 மில்லியன் ரூபா கிடைக்கப்பெற வேண்டியுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதி வணிக பொது முகாமையாளர் பியல் பத்மனாத தெரிவித்தார்.