
50 ஆண்டுகளுக்குப் பின்நிலவுக்கு மனிதர்கள் – நாசாவின் சாதனைப் பயணம்
ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர் மனிதர்களை சந்திரனுக்கு அனுப்பும் பயணத்திற்கான இறுதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் நாசாவின் பாரிய விண்கலம் ஒன்று புளோரிடாவில் உள்ள கேப் கனவெரல் (Cape Canaveral) ஏவுதளத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நான்கு விண்வெளி வீரர்கள் சந்திரனைச் சுற்றி 10 நாட்கள் பயணம் செய்யவுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.
‘ஆர்டெமிஸ் 2’ என்ற இந்த திட்டத்தை மேற்கொள்வதற்கு முன்னதாக, இறுதி ஆய்வுகள், சரிபார்ப்புகள் மற்றும் ஒத்திகைகள் மேற்கொள்ளப்படும் என நாசா தெரிவித்துள்ளது.
இந்த விண்கலம், எதிர்வரும் பெப்ரவரி 6 ஆம் திகதி விண்ணுக்கு ஏவப்படவுள்ளதாக என நாசா அறிவித்துள்ள நிலையில், சில சந்தர்ப்பங்களில் தாமதம் ஏற்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1972 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நீல் அம்ஸ்ரோங்கின் தலைமையின் கீழ் அப்பலோ 17 விண்கலம், சந்திரனில் தரையிறங்கியதன் பின்னர் சந்திரனுக்கு மனிதர்களை ஏற்றிச் செல்லும் முதலாவது திட்டம் இதுவாகும்.
