
50 கைதிகள் தப்பியோட்டம் ?
வெலிக்கந்தை கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்து சுமார் 50 கைதிகள் தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தப்பியோடியவர்களைக் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தப்பியோடிய 21 பேர் மீண்டும் பொலிசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் , இவர்கள் சுங்காவில பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டதாக தெரியவருகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரை தெரியவரவில்லை.
