50 விசேட வைத்தியர்கள் வெளிநாடுகளுக்கு வெளியேற்றம்
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் 50 விசேட வைத்தியர்கள், நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக விசேட வைத்தியர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, மயக்க மருந்துவ நிபுணர்கள் 30 பேரும், அவசர விபத்துப் பிரிவு விசேட வைத்தியர்கள் 20 பேரும், இவ்வாறு நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் இதன் காரணமாக, விசேட வைத்தியர்களைப் பயிற்றுவிக்கும் பணிகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அந்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர், விசேட வைத்தியர் அசோக குணரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்