50 மீற்றர் நீளமான கையை கொண்ட ஆடை!
50 மீற்றர் நீளமான கையை கொண்ட, ஒரு கவர்ச்சிகரமான ஆடையை உருவாக்கி, ஒரு ஃபேஷன் டிசைனர் உலக சாதனை படைத்துள்ளார்.
நைஜீரியாவைச் சேர்ந்த சாமுவேல் சினெசெரெம் எசே (Samuel Chinecherem Ezeh) என்பவர், ஒரு ஆடையில் மிக நீளமான கையை வடிவமைத்து தைத்தார், அதன் நீளம் 51.20 மீற்றர் (167.97 அடி) அளவில் உள்ளது.
அது சுதந்திர தேவி சிலையை (46.5 மீற்றர் 152.5 அடி) விட நீளமானது என தெரிவிக்கப்படுகின்றது
சுக்வுமேகா ஒடுமெக்வு ஓஜுக்வு பல்கலைக்கழக (Chukwuemeka Odumegwu Ojukwu University) மாணவரான 27 வயதான சாமுவேல் சினெசெரெம் எசே, ஃபேஷன் டிசைனராகவும், தையல்காரராகவும் பணிபுரிகிறார்.
அவர் இந்த ஆடை தொடர்பில் குறிப்பிடுகையில், அது எப்படி இருக்கிறது என்பதை உலகுக்குக் காட்ட, வெவ்வேறு நாடுகளிலும் நகரங்களிலும், அதைக் காட்சிப்படுத்த, நான் அதை ஒரு சுற்றுப்பயணத்திற்கு எடுத்துச் செல்ல விரும்புகிறேன், என குறிப்பிட்டுள்ளார்.
