50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பயணித்த பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது!
கொழும்பிலிருந்து 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் எம்பிலிபிட்டியவை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
மாதம்ப கவுடுவாவ பகுதியில் பேருந்தில் திடீரென தீ பரவியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் அதிஸ்டவசமாக பயணிகள் எவரும் பாதிக்கப்படவில்லை.
அந்த பகுதி மக்களின் உதவியுடன் தீயை கட்டுப்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும் பேருந்து முற்றாக எரிந்துவிட்டது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.